கனமழை காரணமாக வைஷ்ணவ தேவி யாத்திரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகக் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஜம்மு-காஷ்மீரில் கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதி பெய்த கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி 36 பக்தர்கள் உயிரிழந்தனர். இதனால், வைஷ்ணவி கோயில் யாத்திரை ஒத்திவைக்கப்பட்டது.
யாத்திரை மீண்டும் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஜம்மு-காஷ்மீரில் பெய்யும் கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாகச் சாலைகள் சேதமடைந்துள்ளதாகவும், போக்குவரத்துக்குப் பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதால் யாத்திரை ஒத்திவைக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, மறு உத்தரவு வரும் வரை வைஷ்ணவ தேவி கோயில் யாத்திரை ஒத்திவைக்கப்படுவதாகக் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.