மேட்டுப்பாளையத்தில் நாய் குறுக்கே வந்ததால் ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்திரா நகரை சேர்ந்த வேல்முருகன் என்பவர் தனது ஆட்டோவில் பயணிகளை ஏற்றிக்கொண்டு குமரபுரம் அருகே சென்று கொண்டு இருந்தார்.
அப்போது சாலையின் நடுவே நாய் குறுக்கே வந்ததால் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வேல்முருகன் சம்பவ இடத்திலேயே பலியான நிலையில் ஆட்டோவில் பயணித்த 3 பேர் காயமடைந்தனர்.