ரஷ்யாவின் மிகப்பெரிய எண்ணெய் முனையம் மீது உக்ரைன் நடத்திய தாக்குதலால் கச்சா எண்ணெய் ஏற்றுமதி நிறுத்தப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்யாவின் பாஷ்கோர்டோஸ் பகுதியில் உள்ள எண்ணெய் ஆலை மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தியதாகவும், இதில் எண்ணெய் ஆலை தீப்பற்றி எரிந்ததாகவும் கூறப்படுகிறது.
ட்ரோன் தாக்குதலில் ஆலைக்குச் சிறிது சேதம் ஏற்பட்டுள்ளதாவும், இந்த விபத்தில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை எனவும் தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், நிதி ஸ்திரத்தன்மையைச் சீர்குலைக்க, ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களைக் குறிவைத்து உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தி வருவதாக ரஷ்ய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.