கன்னியாகுமரி மாவட்டம், மீனச்சல் பகுதியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ண சுவாமி கோயிலில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
புகழ் பெற்ற இக்கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இதனை ஒட்டி கோயில் நிர்வாகம் மற்றும் ராமுனி சித்த மருத்துமனை இணைந்து இலவச மருத்துவ முகாம் ஒன்றை நடத்தின.
இதில் இலவச ரத்த பரிசோதனை, கண் பரிசோதனை செய்யப்பட்டது. காலை முதலே நடைபெற்ற இந்த மருத்துவமுகாமில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று பயனடைந்தனர்.