உலக நாடுகளிலேயே ஜிடிபி வளர்ச்சி கொண்ட ஒரே நாடு இந்தியா தான் எனவும், அந்தளவிற்குச் சீர்திருத்தங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருவதாகவும், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்ற ஜிஎஸ்டி சீர்திருத்தம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பேசியவர்
உலக நாடுகளிலேயே ஜிடிபி வளர்ச்சி கொண்ட ஒரே நாடு இந்தியா தான் என்றும் ஏராளமான சீர்திருத்தங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
ஜிஎஸ்டி சீர்திருத்தத்தால் நாட்டில் கட்டுமான பணிகள் பலமடங்கு உயரும் என்றும் தொலைக்காட்சிகளுக்கான ஜிஎஸ்டி வரியை 28%-ல் இருந்து 18% ஆக மத்திய அரசு குறைத்துள்ளது என்று நயினார் நாகேந்திரன் கூறினார்.
ஜிஎஸ்டி சீர்திருத்தத்தால் மக்களிடம் வாங்கும் சக்தி கூடும் என்றும் இதனால் உற்பத்தி அதிகரிக்கும் என்றும் ஜிஎஸ்டி சீர்திருத்தத்தால் அதிகமானோருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.