அமெரிக்காவின் வாஷிங்டனில், உயிரியல் பூங்காவில் உள்ள பாண்டா கரடி தனது 4-வது பிறந்தநாளை கொண்டாடிய வீடியோ வெளியாகியுள்ளது.
கிங் பாவ் என்றழைக்கப்படும் பாண்டா கரடியின் 4-வது பிறந்த நாளை வெகுவிமர்சையாகக் கொண்டாட உயிரியங் பூங்கா ஊழியர்கள் திட்டமிட்டனர்.
அதன்படி, பூங்காவின் ஊட்டச்சத்து அறிவியல் துறையால் தயாரிக்கப்பட்ட ஒரு சிறப்பு பழ கேக்கை பாண்டாவிற்கு ஊழியர்கள் வழங்கினர்.
பீட்ரூட், அன்னாசி மற்றும் ஆப்பிள் சாறுகளை கொண்டு தயாரிக்கப்பட்ட பல அடுக்கு கேக்கை பாண்டா கரடி ருசித்துச் சாப்பிட்டது.
மேலும், பல்வேறு பரிசு பெட்டியில் இருந்த உணவு வகைகளையும் ருசி பார்த்தது. பின்னர், மரக் கிளைகளில் தொங்க விடப்பட்டிருந்த பலூன்களுடன் பாண்டா விளையாடி மகிழ்ந்து பிறந்த நாளை கொண்டாடியது.