ஹாங்காங் ஓபன் பேட்மிண்டனின் இறுதிப் போட்டியில் சாத்விக் – சிராக் இணை அதிர்ச்சி தோல்வியடைந்தனர்.
ஹூங் ஹோம்பேயில் ஹாங்காங் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி நடந்து வருகிறது.
இந்தத் தொடரில் ஆடவர் இரட்டையர் பிரிவின் இறுதிப்போட்டியில் இந்தியாவின் சாத்விக்-சிராக் இணை, சீனாவின் லியாங் வெய் கெங்-வாங் சாங் இணை மோதின.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 19-21, 21-14,21-17 என்ற செட்கணக்கில் சீன இணை வெற்றிப் பெற்றது.