தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர் அருகே உள்ள கோவிந்தபுரம் விட்டல் பாண்டுரங்கன் கோயிலில் புதிய தேர் செய்யப்பட்டதை அடுத்து தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
முன்னதாக விட்டல் பாண்டுரங்கன் கோயிலுக்குச் சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பில் திருத்தேர் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது.
ஆப்பிரிக்க இபோனி வகை மரக்கட்டைகளைக் கொண்டு 18 அடி அகலம், 18 அடி உயரத்தில் இந்தத் திருத்தேர் அமைக்கப்பட்டது.
சைவ, வைணவ இறை வடிவங்களை தாங்கி 250 சிற்பங்களுடன் 40 டன் எடையில் இந்தப் புதிய திருத்தேர் பிரம்மாண்டமாக காட்சியளித்தது.
இந்தத் திருத்தேரில் முதல்முறையாக எழுந்தருளிய ருக்மணி மற்றும் பாண்டுரங்கன் சாலையில் வலம் வந்து பக்தர்களுக்குக் காட்சியளித்தனர். மேலும், பக்தர்கள் விட்டலா,கிருஷ்ணா என்ற கோஷங்களுடன் தேரை வடம்பிடித்து இழுத்துச் சென்றனர்.