தாய்லாந்தில் உள்ள பாங்காக்கிற்குச் சுற்றுலா சென்ற நடிகை வைகா ரோஸ், அங்கு இரண்டு சிங்கங்களுடன் விளையாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அலெக்சாண்டர் தி கிரேட்” படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமானவர் வைகா ரோஸ். தமிழில் ”குழந்தை முன்னேற்ற கழகம்”, ‘அறுவடை’ மற்றும் ‘காதலே காதலே உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் தாய்லாந்துக்குச் சுற்றுலா சென்ற நடிகை வைகா ரோஸ், பாங்காக்கில் உள்ள உயிரியல் பூங்காவிற்குச் சென்றார். அப்போது பூங்காவில் இருந்த இரண்டு சிங்கங்கள் மீது கைகள் வைத்தப்படி வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
இதுதொடர்பான வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட நிலையில், தற்போது அந்த வீடியோ ரசிகர்களால் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.