ஆசிய கோப்பைக் கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றிப் பெற வேண்டி உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் கங்கா ஆரத்தி நடைபெற்றது.
இந்தியா – பாகிஸ்தான் இடையேயான ஆசிய கோப்பைக் கிரிக்கெட் போட்டிக்கு, உத்தவ் தாக்ரே தலைமையிலான சிவசேனா, ஓவைசியின் மஜ்லிஸ் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இப்போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா வெற்றிப் பெற வேண்டி, வாரணாசியில் கங்கை நதிக் கரையில், ரசிகர்கள் கங்கா ஆரத்தி காண்பித்து வழிபட்டனர்.