அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாளை டெல்லிச் செல்லவுள்ளார்.
அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர்ச் செங்கோட்டையன் வலியுறுத்தி வருகிறார்.
அண்மையில் டெல்லிச் சென்ற அவர் உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோரைச் சந்தித்து பேசினார்.
இந்நிலையில், எடப்பாடி பழனிசாமியும் நாளை டெல்லிச் செல்லவுள்ளார். இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர், குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் வெற்றிப்பெற்ற சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து வாழ்த்து தெரிவிக்க டெல்லிச் செல்லவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, 17 மற்றும் 18ம் தேதிகளில் தர்மபுரி மாவட்டத்தில் இபிஎஸ் மேற்கொள்ளவிருந்த சுற்றுப்பயணம், 28 மற்றும் 29-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.