தமிழகத்தின் முக்கியமான சுற்றுலாத் தளங்களில் ஒன்றாகத் திகழும் கொல்லிமலையில் சுற்றுலாப் பயணிகளுக்கான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட இல்லை என்ற புகார் எழுந்துள்ளது.
நாளுக்கு நாள் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில் கொல்லிமலையில் சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.