கொல்கத்தாவில் ராணுவ தளபதிகள் மாநாட்டை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.
ராணுவம், விமானப்படை, கடற்படை தளபதிகள் பங்கேற்கும் முப்படை தளபதிகள் மாநாடு இன்று முதல் 17ம் தேதி வரை 3 நாட்கள் நடைபெறவுள்ளது.
‘சீர்திருத்தங்களின் ஆண்டு – எதிர்காலத்திற்கான உருமாற்றம்’ என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு இந்த மாநாடு நடத்தப்படுகிறது.
இதில், பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகான், பாதுகாப்பு துறைச் செயலாளர் ராஜேஷ் குமார் சிங் உள்ளிட்டோர்க் கலந்துகொள்கின்றனர்.
ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை, இந்திய – சீன எல்லைப் பிரச்னை, ராணுவ வலிமையை அதிகரித்தல் உள்ளிட்டவைக் குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.