நெல்லை மாவட்டம், திசையன்விளை அருகே நடந்த நாய்களுக்கான ஓட்டப்பந்தயத்தில் 32 நாய்கள் கலந்து கொண்டன.
திசையன்விளை அருகே பெருங்குளம் பகுதியில் அய்யா வைகுண்டர் பெருமைபதி திருவிழாவை முன்னிட்டு முதல் முறையாக நாய்களுக்கான ஓட்டப்பந்தயம் நடைபெற்றது..
R.R. ரேஸ் கிளப் சார்பில் நடந்த ஓட்டப்பந்தயத்தில் கிரேக் கவுண்ட் இனத்தை சார்ந்த 32 நாய்கள் கலந்து கொண்டன. .
4 சுற்றுகளாக நடந்த ஓட்டப்பந்தயத்தில் வெற்றிப் பெற்ற நாய்களின் உரிமையாளருக்கு முதல் பரிசாக 15 ஆயிரம், 2ஆம் பரிசாக 10 ஆயிரம், 3ஆம் பரிசமாக 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.
நாய்களுக்கான ஓட்டபந்தயத்தைச் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமானோர் ஆர்வமுடன் கண்டு களித்தனர்.