வரி விதிப்பதாலோ, பொருளாதாரத் தடை விதிப்பதாலோ போருக்குத் தீர்வு காண முடியாது என்றும், அது பிரச்னையை மேலும் சிக்கலாக்கும் எனவும் அமெரிக்க அதிபர் டிரம்புக்குச் சீனா பதிலளித்துள்ளது.
ரஷ்யா – உக்ரைன் இடையேயான மோதலை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில், போர் முடியும் வரைச் சீனா மீது 50 முதல் 100 சதவீதம் வரை வரி விதிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை ரஷ்யா மீது எடுக்குமாறு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ‘நேட்டோ’ நாடுகளை வலியுறுத்தினார்.
இந்நிலையில், வரி விதிப்பதும், பொருளாதாரத் தடை விதிப்பதும் நிலைமையை மேலும் சிக்கலாக்கும் என்றும், போர் பிரச்னையை தீர்ப்பதற்கான அமைதி பேச்சுவார்த்தைகளை ஊக்குவிப்பதற்குச் சீனா உறுதிபூண்டுள்ளதாகவும் அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி தெரிவித்துள்ளார்.
மேலும், தற்போதைய காலகட்டத்தில் குழப்பமான சூழல் நிலவுவதாகவும், சீனாவும் ஐரோப்பாவும் போட்டியாளர்களாக இருக்காமல், நண்பர்களாக இருக்க வேண்டும் என்றும் வாங் யி அறிவுறுத்தி உள்ளார்.