விசிகவினரை தாக்கிய வழக்கில் சிறையில் உள்ள ஏர்போர்ட் மூர்த்தி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை, புரட்சி தமிழகம் கட்சித் தலைவரான ஏர்போர்ட் மூர்த்தி தொடர்ந்து விமர்சனம் செய்து வந்தார்.
இந்நிலையில், கடந்த 6ம் தேதி சென்னை கடற்கரை சாலையில் உள்ள டி.ஜி.பி. அலுவலகம் அருகே அவருக்கும், விசிகவினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து, கத்தியை கொண்டு தாக்கியதாக ஏர்போர்ட் மூர்த்தி மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் புகார் அளித்தனர்.
அதன் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுப் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், அவர் மீது குண்ட சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார்.