கடலில் 217 மைல் தொலைவில் வரும் எதிரிநாட்டுக் கப்பலை தாக்கி அழிக்கும் சூப்பர் சோனிக் ஏவுகணையை ரஷ்யா வெற்றிகரமாகச் சோதனை செய்துள்ளது.
பசிபிக் கடற்கரையில் ரஷ்யா அவ்வப்போது போர்ப் பயிற்சியை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் அந்நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள குரில் தீவுகளுக்கு அருகே சூப்பர் சோனிக் ஏவுகணை சோதனையை ரஷ்யா மேற்கொண்டுள்ளது.
இதன் மூலம் 217 மைல் தொலைவில் உள்ள எதிரி நாட்டு கப்பலை குறி வைத்து தாக்க முடியும் என்று கூறப்படுகிறது.