கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே ராஜாமங்கலம் பகுதியில் மீனவ இளைஞரை தாக்கி ஐம்பதாயிரம் ரூபாய் மற்றும் செல்போனை பறித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அழிக்கால் பகுதியைச் சேர்ந்த மீனவ இளைஞர் அருண், இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது அவரை வழிமறித்த சிலர், கல் மற்றும் கட்டையை கொண்டு கொடூரமாகத் தாக்கினர்.
அருண் மயங்கி விழுந்ததும், அவர் வைத்திருந்த ஐம்பதாயிரம் பணத்தையும், செல்போனையும் பறித்துக் கொண்டு தப்பியோடினர்.
இந்நிலையில், மயங்கி விழுந்த அருண் மீட்கப்பட்டுத் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் வழிப்பறி கும்பலை சேர்ந்த இரண்டு பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.