செனகல் நாட்டில் சைக்கிளிங் வீரர்களுக்கு மாற்றுத்திறனாளி தடகள வீரர் 450 கிலோ மீட்டர் தூரம் வரை சைக்கிளிங் செய்து பயிற்சி அளித்திருக்கிறார்.
முயன்றால் முடியாதது எதுவுமில்லை இவ்வுலகில், என்ற பழமொழிக்கு ஏற்ப, மேற்கு ஆப்பிரிக்கா நாடுகளில் ஒன்றான செனகல் நாட்டில் அப்படி ஒரு சம்பவம் நடந்ததுள்ளது. என்னவென்று தற்போது விரிவாகப் பார்ப்போம்.
செனகலைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி தடகள வீரரான மக்கூம்பா, மாற்றுத்திறனாளி மற்றும் உடல் தகுதியுடைய சைக்கிளிங் வீரர்களுக்குப் பயிற்சி அளித்து வருகிறார். இந்நிலையில், தனது குழுவுக்கு நெடுந்தொலைவு வரை சைக்கிளிங் செய்து பயிற்சி அளிக்க நினைத்த மக்கூம்பா,
தலைநகர் டக்காரில் இருந்து 450 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஜிகுயின்சோர் வரைத் தனது வீரர்களுடன் சைக்கிளிங் செய்து பயிற்சி அளித்தார்.
சராசரி உடல் தகுதி உடைய வீரர்கள் மத்தியில் 450 கிலோ மீட்டர் தூரம் வரை சைக்கிளிங் செய்து பயிற்சி அளித்த அவரது முயற்சி, மற்ற வீரர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்கிறது என்று கூறினால் அது மிகையாகாது.