சொத்து அபகரிப்பு தொடர்பாக முதலமைச்சர் தனிப்பிரிவில் மனு அளித்து நடவடிக்கை ஏதும் இல்லையெனக் கூறி சென்னையில் திமுக தொண்டர் ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டார்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தை சேர்ந்த திமுக பிரமுகர் குமார் என்பவர், சென்னையில் உள்ள தனது 150 கோடி ரூபாய் சொத்துகளை உறவினர் அபகரித்ததாகப் புகார் கூறியுள்ளார்.
இது தொடர்பாக முதலமைச்சர் தனிப்பிரிவில் மனு அளித்தும் நடவடிக்கை ஏதும் இல்லையெனக் கூறி சென்னை அண்ணா சாலையில் உள்ள முன்னாள் முதலமைச்சர் அண்ணா சிலை முன்பு முதலமைச்சர் ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி படங்கள் உள்ள பேனருடன் போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து அங்கிருந்த போலீசார் அவரை சமானதாப்படுத்தி அனுப்பி வைத்தனர்.