பழுதடைந்த பொருளை தூக்கி எறியாமல் அதை சரி செய்து பயன்படுத்தும் இந்தியர்களின் பழக்கத்தைக் கண்டு வியப்பதாக அமெரிக்கப் பெண் ஒருவர் தெரிவித்துள்ளார்.
பலநாடுகளில் ஒரு பொருள் பழுதடைந்துவிட்டால் அதனை மக்கள் தூக்கி எறிந்துவிட்டுப் புதிதாக வாங்குவதையே வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
ஆனால் இந்தியர்கள் அதனைப் பழுதுநீக்கி மீண்டும் பயன்படுத்துகின்றனர். இது, பணத்தைச் சேமிப்பது மட்டுமின்றிக் கழிவுகளை குறைக்கவும் உதவுகிறது.
இதனை உலகிற்கு எடுத்துக் காட்டும் வகையில் இந்தியாவில் வசிக்கும் அமெரிக்காவைச் சேர்ந்த கிறிஸ்டன் பிஷ்ஷர் என்பவர், இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், பழுதான கெட்டிலைச் சரிசெய்ய கடைக்காரர் 30 ரூபாய் மட்டுமே வசூலித்ததாகவும் பழுதடைந்த பொருளைத் தூக்கி எறியாமல் அதைச் சரி செய்து பயன்படுத்தும் இந்தியர்களின் பழக்கத்தைக் கண்டு வியப்பதாகவும் தெரிவித்துள்ளார்.