ஃபிடே கிராண்ட் சுவிஸ் செஸ் போட்டியில் தமிழக வீராங்கனை வைஷாலி வெற்றிப் பெறுவதற்கான கடைசி படியில் காலூன்றி நிற்கிறார்.
உஸ்பெகிஸ்தானில் உள்ள சமர்கண்ட் நகரில் ஃபிடே கிராண்ட் சுவிஸ் செஸ் போட்டி நடைபெற்று வருகிறது. 11 சுற்றுகள் கொண்ட தொடரின் 10வது சுற்றில் வைஷாலி ஏழரை புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.
பத்தாவது சுற்றில் உக்ரைனை சேர்ந்த மரியா முசிச்சுக்கை வீழ்த்தி வெற்றிப் பெற்றார். இந்நிலையில் வைஷாலி இறுதி சுற்றில் சீனாவின் டான் ஜோங்ஜியுடன் மோதுகிறார்.
இதில் வெற்றிப் பெற்று வைஷாலி சாம்பியன் பட்டம் வெல்வாரா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.