அன்புமணியைப் பாமக தலைவராக தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததை வரவேற்று அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் அவரது ஆதரவாளர்கள் பட்டாசுகள் வெடித்துக் கொண்டாடினர்.
பாமகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலும் இருந்து அன்புமணியை நீக்குவதாகக் கடந்த சில நாட்களுக்கு முன்பு அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்திருந்தார்.
இந்தநிலையில் பாமகத் தலைவராக அன்புமணியை அங்கீகரித்துத் தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளதாக அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் பாலு தெரிவித்தார்.
இந்த அறிவிப்பை அடுத்து அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் அன்புமணியின் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர்.
அப்போது பேருந்துகளில் இருந்த பயணிகளுக்கு அவர்கள் இனிப்புகளை வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.