உலகப் புகழ்பெற்ற குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் வரும் 23ம் தேதி தசரா விழா கொடியேற்றத்துடன் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எப்போது காலை 8 மணிக்கு மேல் கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றுவந்த நிலையில், இந்தமுறை அதிகாலை 6 மணிக்கே கொடியேற்ற விழா தொடங்கும் எனக் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
12 நாட்கள் நடைபெறும் தசரா விழாவை ஒட்டி பக்தர்கள் ஏராளமானோர் மாலை அணிந்து தங்களது விரதத்தைத் தொடங்கினர்.
அப்போது பக்தர்கள் காளி, சிவன் உள்ளிட்ட தெய்வங்களின் வேடங்களை அணிந்து கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனர்.