30 லிட்டர் தாய்ப்பாலை தானம் செய்துள்ள நடிகர் விஷ்ணு விஷாலின் மனைவி ஜ்வாலா குட்டாவிற்குப் பாராட்டு குவிந்து வருகிறது.
2021 ஆம் ஆண்டு பேட்மிண்டன் வீராங்கனை ஜ்வாலா குட்டாவைக் காதலித்து 2ஆவது திருமணம் செய்து கொண்டார் நடிகர் விஷ்ணு விஷால்.
இந்நிலையில் இருவருக்கும் கடந்த ஏப்ரல் மாதம் பெண் குழந்தைப் பிறந்தது. அந்தக் குழந்தைக்குப் பாலிவுட் நடிகர் அமீர்கான் மிரா எனப் பெயர் சூட்டினார்.
இந்நிலையில் விஷ்ணு விஷாலின் மனைவி ஜ்வாலா குட்டா, தாய்ப்பால் தானம் செய்வதில் முன்னுதாரணமாக மாறியுள்ளார். இதுவரை அவர் 30 லிட்டர் அளவிற்குத் தாய்ப்பால் தானம் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ஜ்வாலா, தாய்ப்பால் தானம், குறைப்பிரசவத்தில் பிறந்த மற்றும் நோய்வாய்ப்பட்ட குழந்தைகளின் வாழ்க்கையை மாற்றும் எனவும் நீங்கள் தானம் செய்ய முடிந்தால் ஒரு குடும்பத்திற்கு ஹீரோவாக இருக்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.