ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவை கபளீகரம் செய்யச் சிலர் முயன்றதாகவும், மத்தியில் இருந்தவர்கள் கட்சியைக் காப்பாற்றிக் கொடுத்ததற்கு இன்றும் நன்றி மறக்காமல் இருப்பதாகவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை வடபழனியில் அண்ணா பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில் பேசியவர்,
மத்தியில் இருந்தவர்கள் அதிமுகவைக் காப்பாற்றினர் என்றும் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவைக் கபளீகரம் செய்யச் சிலர் முயன்றனர் என்று எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டார்.
அதிமுகவை உடைக்க வேண்டும் என்று செயல்பட்டவரை மன்னித்துத் துணை முதலமைச்சர் பதவி வழங்கினோம் என்றும் அதிமுகவுக்குத் துரோகம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடுரோட்டில்தான் நிற்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
அதிமுகவுக்குத் துரோகம் செய்தவர்களை ஆண்டவன் மன்னிக்க மாட்டடான் என்றும் எனக்கு ஆட்சி, அதிகாரத்தை விட தன்மானமே முக்கியம் என்றும் அதிமுக அலுவலகத்தை உடைத்தவரை மீண்டும் கட்சியில் சேர்க்க முடியுமா? என்று கேள்வி எழுப்பியவர் மத்தியில் இருந்தவர்கள்தான் அதிமுகவைக் காப்பாற்றிக் கொடுத்தனர் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.