சென்னைப் பள்ளிக்கரணையில் பேருந்துக்காகக் காத்திருந்தவரிடம் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட நபரைப் போலீசார் கைது செய்தனர்.
சுப்பிரமணி என்பவர்ப் பள்ளிக்கரணை மேம்பாலம் அருகே பேருந்துக்காகக் காத்திருந்தனர். அப்போது மதுபோதையில் அங்கு வந்த நபர் ஒருவர் அவரிடம் செல்போன் பறிப்பில் ஈடுபட்டார்.
இதனைச் சுதாரித்துக்கொண்ட சுப்பிரமணி மதுபோதை நபரைத் தாக்கியதோடு அங்கிருந்தவர்களும் அவரைத் தாக்கினர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தியதில் செல்போன் பறிப்பில் ஈடுபட்டது ராமராஜ் என்பதும் பலரிடம் செல்போன் பறிப்பு, வழிப்பறியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
பின்னர் ராமராஜை கைது செய்த போலீசார் தொடர்ந்து விசராணை மேற்கொண்டு வருகின்றனர்.