அமெரிக்காவின் மெக்சிகோ நகரத்தின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள இஸ்தபலபாவில் கனமழை காரணமாக கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
காட்டாற்று வெள்ளம் போல் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால், போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது.
இதில் ஒரு வாகனத்தில் சென்ற மக்கள், உள்ளேயே சிக்கித் தவித்தனர். பின்னர் பேரிடர் மீட்புக் குழுவினர் அங்கு வந்து அவர்களை மீட்டனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.