திராவிட மாடல் கும்பல் அரியணையில் தொடரவே தகுதியற்றது - நயினார் நாகேந்திரன்
Sep 7, 2026, 12:37 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திராவிட மாடல் கும்பல் அரியணையில் தொடரவே தகுதியற்றது – நயினார் நாகேந்திரன்

Murugesan M by Murugesan M
Sep 16, 2025, 07:35 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழக அரசுப் பள்ளிகளை, அவலங்களின் உறைவிடமாக மாற்றியது தான் திமுகவின் நான்காண்டுகால சாதனை என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

திருவண்ணாமலை மாவட்டம் செல்வரைப்பூண்டி என்ற கிராமத்தில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றியத் துவக்கப்பள்ளியில் 46 மாணவர்களுக்கு ஒரே ஒரு ஆசிரியர் மட்டுமே இருப்பதாகக் கூறி அப்பள்ளி மாணவர்களும் பெற்றோர்களும் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம், திமுக அரசின் நிர்வாக சீர்கேட்டினை தோலுரித்துக் காட்டுகிறது.

ஒரு காலத்தில் பெருமையின் அடையாளமாகத் திகழ்ந்த தமிழக அரசுப் பள்ளிகளை, ஆட்சிக்கு வந்தவுடன் அவலங்களின் உறைவிடமாக மாற்றியது தான் திமுகவின் நான்காண்டுகால சாதனை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

பல குடிகளைக் கெடுக்கும் டாஸ்மாக் கடைகளை நவீனமயமாக்குவதில் முழு வேகத்துடனும் விவேகத்துடனும் செயலாற்றும் முதல்வர்  ஸ்டாலின், அரசுப் பள்ளிகளில் உள்ள ஆசிரியர் பற்றாக்குறை உள்ளிட்ட அடிப்படை பிரச்சினைகளைத் தொடர்ந்து புறக்கணிப்பது ஏன்? ஏழைப்பிள்ளைகள் படித்தென்ன லாபம் என்ற இளக்காரமா? சமூகநீதியின் காவலர்களாகத் தங்களை முன்னிறுத்திக் கொள்ளும் திமுக தலைவர்கள் எல்லாம் தங்கள் வீட்டுப் பிள்ளைகளை எவ்வித அடிப்படை வசதியுமற்ற அரசுப் பள்ளிகளில் படிக்க வைப்பார்களா? என்று நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.

ஊரார் வீட்டுப் பிள்ளைகளின் எதிர்காலம் எக்கேடு கேட்டுப் போனால் என்ன என்று அலட்சியப்படுத்தும் திராவிட மாடல் கும்பல் அரியணையில் தொடரவே தகுதியற்றது என்று நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.

Tags: DMKMK Stalinநயினார் நாகேந்திரன்The Dravidian model group is unfit to continue on the throne - Nainar Nagendran
Share
Tweet
SendShare
Previous Post

செங்கல்பட்டு அருகே பாமக பிரமுகர் அடித்துக் கொலை!

Next Post

பிரதமர் மோடியின் ஆட்சிக்காலம், நாட்டின் வரலாற்றில் ஒரு அத்தியாயம் அல்ல, சகாப்தம் – ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம்!

Related News

ஆர்.எஸ்.எஸ் தலைவரின் வெளிநாட்டுப் பயணம் ஏன் ?; பிரச்சாரத் தலைவர் சுனில் அம்பேகர் விளக்கம்

இந்தியர்களுக்கு எதிரான பிரச்சாரம்; சிங்கப்பூரில் இருந்து எழுந்த எதிர்ப்பு

அரசியலமைப்புச் சட்டத்தின் 370-வது பிரிவை நீக்கியதால் ஏற்பட்ட மாற்றம்; அமித் ஷா உரை

சமூக நலன் மற்றும் சமூக நீதித் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்த மறுஆய்வுக் கூட்டம்; பிரதமர் மோடி தலைமையில் நாளை நடைபெறுகிறது

டெல்லியில் 5 மாடி கட்டிட விபத்து; 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் சிக்கியதாக தகவல்

நாட்டின் பாதுகாப்பிற்கு வலு சேர்க்கும் இளம் அதிகாரிகள் : OTA-வில் பெற்றோரின் கனவும். தேசப்பற்றும் சங்கமமும் – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரானுடன் நீண்ட கால போருக்கு தயாராகிறதா அமெரிக்கா? – சிறப்பு தொகுப்பு!

டெல்லியில் வரும் 8ம் தேதி காவிரிநீர் மேலாண்மை ஆணைய கூட்டம் – கூடுதல் நீர் கேட்க தமிழக அர’சு திட்டம்!

அடையாறு அருகே தவெக நிர்வாகி கொலை – 5 பேர் கைது!

தீபாவளி பண்டிகை ரயில் டிக்கெட்டு முன்பதிவு – தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்தன.

சென்னை 2-வது விமான நிலையத்திற்கு இரு இடங்கள் தேர்வு என தகவல்!

ராஜபாளையத்தில் விநாயகர் சதுர்த்திக்காக தயார் செய்யப்பட்ட சுவாமி சிலைகள் ஊர்வலம்!

கடற்படை கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தினால் ஈரானின் எண்ணெய் கப்பல்கள் முற்றிலும் அழிக்கப்படும் – அமெரிக்கா எச்சரிக்கை!

ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் – பாகிஸ்தானை பந்தாடியது இந்தியா!

லண்டன் குருத்வாராவில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் வழிபாடு!

தமிழகம் முழுவதும் சுமார் 1.5 லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க ஏற்பாடு – காடேஸ்வரா சுப்பிரமணியம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies