மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரண்டு மணி நேரத்திற்கு மேலாகக் கனமழை வெளுத்து வாங்கியது.
மேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான அழகர்கோவில், வல்லாளபட்டி, கீழையூர், நாவினிபட்டி , புலிப்பட்டி, எட்டிமங்கலம், மேலவளவு, கீழவளவு உள்ளிட்ட பகுதிகளில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக இடியுடன் கூடிய கனமழை பெய்தது.
இதனால் பணி முடிந்து வீடு திரும்பியவர்கள் மழையில் நனைந்தபடி சென்றனர். நகரின் பெரும்பாலான சாலைகளில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகினர்.
எனினும் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் நிம்மதி அடைந்தனர்.