ராணிப்பேட்டை மாவட்டம் கலவைப் பேரூராட்சியில், முன்னாள் தலைவர்களின் புகைப்படங்களைக் குப்பைத் தொட்டியில் வீசியதைக் கண்டித்து, பேரூராட்சி தலைவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கலவைப் பேரூராட்சியில் நேற்று நடைபெறவிருந்த மாமன்ற கூட்டத்தில் பங்கேற்க அதிமுக மாமன்ற தலைவர் கலா சதீஷ், துணைத் தலைவர் நீலாவதி தண்டபாணி உள்ளிட்டோர் வந்தனர்.
அப்போது, அங்கு வைக்கப்பட்டிருந்த தலைவர்களின் புகைப்படங்களை அதிகாரிகள் அப்புறப்படுத்தி குப்பைத் தொட்டியில் வீசியதாகக் கூறப்படுகிறது.
இதனைக் கண்டித்து அவர்கள் உள்ளிருப்ப போராட்டத்திலும், மறியலிலும் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயக்குமார், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததால் போராட்டம் கைவிடப்பட்டது.