உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவரான மெஸ்சி பிரதமர் மோடிக்குப் பிறந்தநாள் பரிசு அனுப்பியுள்ளார்.
அர்ஜென்டினாவைச் சேர்ந்த கால்பந்து விளையாட்டின் ஜாம்பவனான லியானல் மெஸ்சிக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். அவர் விளையாடும் போட்டிகளுக்கு எப்போதும் கிராக்கி இருக்கும் நிலையில், டிக்கெட் விலையோ தாறுமாறாக எகிறும் இருக்கும்.
அப்படிப்பட்ட மெஸ்சி வரும் டிசம்பர் மாதத்தில் இந்தியாவில் பயணம் மேற்கொள்வதாகத் தகவல் வெளியாக, இங்குள்ள ரசிகர்கள் உற்சாகத்தில் மிதந்து வருகின்றனர். நவம்பரில் கேரளா வரும் அவர் நட்பு ரீதியான போட்டியில் விளையாட உள்ளார்.
அதனைத் தொடர்ந்து, டிசம்பரில், கொல்கத்தா, மும்பை ஆகிய பகுதிகளுக்குச் செல்லும் மெஸ்சி, பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ள உள்ளார்.
டிசம்பர் 12ம்தேதி பிரதமர் மோடியையும் மெஸ்சி சந்தித்துப் பேச ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மெஸ்ஸியின் இந்த இந்திய சுற்றுப்பயணத்திற்கு ‘GOAT Tour of India 2025’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இதனிடையே பிரதமர் மோடியின் 75-வது பிறந்தநாளை ஒட்டி மெஸ்சி பரிசு அனுப்பியுள்ளார்.
தனது கையொப்பமிட்ட 2022 ஃபிபா உலகக்கோப்பை அர்ஜென்டினா ஜெர்சியை பிரதமர் மோடிக்கு அவர் பரிசாக வழங்கியுள்ளார்.