பெல்லங்கொண்ட சாய் ஸ்ரீனிவாஸ் மற்றும் அனுபமா பரமேஸ்வரன் இணைந்து நடித்த கிஷ்கிந்தாபுரி படம் பாக்ஸ் ஆபிஸில் வரவேற்பை பெற்றுள்ளது.
ஹாரர் – திரில்லரில் உருவாகி உள்ள கிஷ்கிந்தாபுரி படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. சாண்டி மாஸ்டர் இப்படத்தில் ஒரு வித்தியாசமான வில்லன் கதாப்பாத்திரம் மற்றும் தோற்றத்தில் நடித்துள்ளார்.
அவர் நடித்த ஒரு காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. புக் மை ஷோ தகவல்படி சனிக்கிழமையே சுமார் 75 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்பனையானது.
இது வெள்ளிக்கிழமை விட 25 ஆயிரம் அதிகம் எனத் தகவல் வெளியாகி உள்ளது. இதனால் படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.