நாடாளுமன்றத்தில் 14 கோடி ரூபாய் செலவில் நவீன பாதுகாப்பு அம்சங்களை ஏற்படுத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக மத்திய பொதுப்பணித்துறை 14 கோடியே 63 லட்சம் மதிப்பீட்டில் டெண்டர் கோரியுள்ளது.
இதன்படி நாடாளுமன்ற வளாகத்தைச் சுற்றி வீடியோ கண்காணிப்புடன் கூடிய மின்வேலி அமைக்கப்பட உள்ளது.
நுழைவு வாயில்கள் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் நவீனச் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன.
கண்ணாடி இழை அடிப்படையிலான கண்காணிப்பு திட்டம் என அனைத்தையும் ஒருங்கிணைத்துப் பாதுகாப்பை பலப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
4 மாதங்களுக்குள் இந்தப் பணிகளை முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. நாடாளுமன்ற வளாகத்திற்குள் அத்துமீறி யாரும் நுழைந்து விட கூடாது என்ற அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.