லிட்டில் ஹார்ட்ஸ் திரைப்படம் பத்து நாட்களில் 32 கோடிக்கும் அதிகமாக வசூலித்துச் சாதனை படைத்துள்ளது.
அறிமுக இயக்குநர் சாய் மார்த்தாண்ட் இயக்கத்தில் இரண்டரைக் கோடி பட்ஜெட்டில் காதல், நகைச்சுவை திரைப்படமாக லிட்டில் ஹார்ட்ஸ் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
மவுலி தனுஜ் பிரசாந்த் மற்றும் ஷிவானி நகரம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
கடந்த 5-ம் தேதி திரைக்கு வந்த இப்படம் 10 நாட்களில் 32 கோடியே 15 லட்சத்தை வசூலித்துச் சாதனை படைத்து வருகிறது.