140 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவின் மிக்சிக்கன் ஏரியில் மூழ்கிய சரக்கு கப்பல் தற்போது கண்டறியப்பட்டுள்ளது.
144 அடி உயரம் கொண்ட FJ King சரக்கு கப்பல், 1886 -ம் ஆண்டில் மிக்சிக்கனில் இருந்து சிக்காகோ நோக்கி புறப்பட்டுச் சென்றது.
இரும்பு பொருட்களை ஏற்றிச் சென்ற சரக்கு கப்பல், விஸ்கான்சின் பகுதியில் பயணித்தபோது புயலில் சிக்கி, மிக்சிக்கன் ஏரியில் மூழ்கியது.
மாலுமிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், மூழ்கிய கப்பலை தேடும் பணி அப்போது பாதியில் கைவிடப்பட்டது.
1970-ம் ஆண்டு முதல் மாயமான கப்பலை தேடும் பணி மீண்டும் தொடங்க, அது பெரும்பாலும் தோல்வியிலேயே முடிந்தது.
கேப்டன் கிரிஃபின் அளித்த தகவலின் அடிப்படையில், பெய்லி துறைமுகத்தில் இருந்து ஜந்து மைல் தொலைவில் கப்பல் தேடப்பட்டு வந்த நிலையில், விடைக் கிடைத்தபாடில்லை.
கடலில் மூழ்கிய போது கேப்டன் கிரிஃபின் பதற்றத்தில் இருந்திருப்பார் என்பதால், கலங்கரை விளக்கக் காவலாளர் கூறிய இடத்தில் தேடுதல் பணி முடக்கிவிடப்பட்டது.
அதன்படி, கடலில் மூழ்கி மாயமான FJ King சரக்கு கப்பல் பாழடைந்த நிலையில் கண்டறியப்பட்டுள்ளது.