மலேசியாவில் கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
அந்நாட்டின் சபா மாநிலத்தின் கோட்டா கினபாலுவில் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுச் சாலைகளில் மழைநீர் தேங்கியது.
ஏராளமான வீடுகள் மழை வெள்ளத்தால் சேதமடைந்துள்ளன. கனமழையைத் தொடர்ந்து ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 11 பேர் உயிரிழந்தாகத் தகவல் வெளியாகி உள்ளது.