அசாமில் சட்டவிரோதமாகச் சொத்து சேர்த்ததாக இளம் பெண் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
2019-ம் ஆண்டில் அசாம் சிவில் சர்வீஸ் பணியில் சேர்ந்த நுபுர் போரா என்ற பெண், காம்ரப் மாவட்டத்தின் கோரோய் மாரி என்ற பகுதியில் வட்டார அலுவலராகப் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் குறுகிய காலத்தில ஆடம்பரமான வாழ்கையை வாழ்ந்து வந்துள்ளார்.
இதனால் அவர் மீது சந்தேகம் அடைந்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், பார்பெட்டா பகுதியில் வாடகை வீட்டில் தங்கியிருந்த நுபுர் போராவை ரகசியமாகக் கண்காணித்து வந்தனர்.
6 மாதங்களாகச் சேகரித்த விவரங்களின் அடிப்படையில், நுபர் போராவுக்கு சொந்தமான அனைத்து இடங்களிலும் அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
தலைநகர் கவுகாத்தியில் உள்ள வீட்டில், 92 லட்சம் ரூபாய் ரொக்கம், தங்க நகைகள் சிக்க, பார்பெட்டா வாடகை வீட்டில் கணக்கில்வராத ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் பணம் சிக்கியது.
இதனால் அதிர்ச்சியடைந்த லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள், நுபுர்ப போராவை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.