மாற்றுத்திறனாளிகள் வாக்குச்சவாடிகளை எளிதில் அணுகுவதற்கான வசதிகளை ஏற்படுத்தி தருவதற்கான சட்ட விதிகளைக் கண்டிப்பாக பின்பற்ற வேண்டுமெனத் தேர்தல் ஆணையத்திற்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வாக்குப்பதிவு நாளான்று மாற்றுத்திறனாளிகள் எளிதில் வாக்குச்சாவடிகளை அணுகுவதற்கான சட்டவிதிகள் முழுமையாகப் பின்பற்றவில்லை எனக் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வைஷ்ணவி ஜெயகுமார் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி ஸ்ரீவஸ்தவா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மாற்றுத்திறனாளிகள் வாக்குச்சாவடிகளை அணுகுதல், சாய்வுதளம் அமைத்தல், மாற்றுத்திறனாளிகளை அழைத்து வருவதற்காகப் போக்குவரத்து ஏற்பாடுகள் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டுமென வாதிட்டார்.
அப்போது மாற்றுத் திறனாளிகள் சட்ட விதிகளை கட்டாயமாக அமல்படுத்த வேண்டு எனத் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்ட நீதிபதிகள், கடந்த தேர்தலில் இந்த விதிகள் முழுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்து பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் எனவும் ஆணையிட்டனர்.