சீன மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரில் டென்மார்க் வீராங்கனையை வீழ்த்தி பி.வி.சிந்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
சீனாவின் ஷெ்சென் நகரில் சீன மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி தொடங்கியது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டத்தில் டென்மார்க் வீராங்கனை ஜூலி டாவாலை இந்திய வீராங்கனை பி.வி.சிந்து எதிர்கொண்டார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பி.வி.சிந்து 21-5, 21-10 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.