செங்கல்பட்டு அருகே பாமக பிரமுகர் அடித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இளந்தோப்பு பகுதியைச் சேர்ந்த வாசு என்பவர், பாமக மாவட்ட துணைச் செயலாளராகச் செயல்பட்டு வந்துள்ளார். அதுமட்டுமின்றி இவர் செங்கல்பட்டு பகுதியில் உள்ள தனியார் நிறுவனங்களுக்குக் கேட்டரிங், குடிநீர் விநியோகம் உள்ளிட்ட தொழில்களில் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில் இளந்தோப்பு பகுதியில் தனது நண்பர்களுடன் வாசு மது அருந்தி கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் 2 பேர், வாசுவைக் கற்கள், கட்டையால் கடுமையாகத் தாக்கியுள்ளனர்.
இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து வந்த போலீசார், உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், தப்பியோடிய கொலையாளிகளை தேடி வருகின்றனர்.
			















