பிரதமர் மோடி இன்று 75வது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியைத் தொலைபேசியில் தொடர்பு கொண்ட அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது பிறந்தநாள் வாழ்த்துகளை கூறியுள்ளார்.
தொலைபேசி உரையாடலின்போது, டிரம்பை தனது நண்பர் எனக் குறிப்பிட்டு பிரதமர் மோடி நன்றித் தெரிவித்திருக்கிறார்.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான உலகளாவிய கூட்டாண்மையைப் புதிய உயரத்திற்கு இட்டுச்செல்வதில், தங்களை போன்று தானும் உறுதியாக உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைனில் அமைதியான தீர்வு காண அமெரிக்கா மேற்கொள்ளும் முயற்சிகளை இந்தியா ஆதரிப்பதாகவும் பிரதமர் மோடி எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளார்.
அமெரிக்கா வரி விதிப்புக்குப் பின்னர் பிரதமர் மோடியிடம் முதல் முறையாக டிரம்ப் பேசியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.