டெல்லிச் சென்றுள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார்.
அதிமுக மூத்த நிர்வாகிகளுடன் டெல்லிச் சென்ற அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்தார். அப்போது பல்வேறு முக்கிய ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
இந்தச் சந்திப்பின் போது அதிமுக முக்கிய நிர்வாகிகளான எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், தம்பிதுரை, கே.பி.முனுசாமி ஆகியோரும் உடனிருந்தனர்.