பிரதமர் மோடியின் 75-வது பிறந்தநாளையொட்டி நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் களைகட்டியது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பிரதமரின் பிறந்தநாளையொட்டி மலர்களால் இந்திய வரைபடம் உருவாக்கப்பட்டது. பின்னர் அந்த வரைபடத்தை சுற்றி சிறுவர்கள், இளைஞர்கள், பெண்கள் என அனைவரும் பாரம்பரிய கர்பா நடனமாடினர்.
உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் கங்கை நதிக்கரையில் பக்தர்கள் சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர். கங்கை நதிக்கரையில் ஆரத்தி எடுத்துப் பிரார்த்தனை செய்தனர்.
பிரதமரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக டெல்லியில் உள்ள இந்தியா கேட் பகுதியில் சேவா சங்கல்ப் நடைபயணம் நடைபெற்றது. இதில், அம்மாநில முதலமைச்சர் ரேகா குப்தா, மத்திய அமைச்சர்கள் மற்றும் பாஜகவினர் கலந்துகொண்டனர்.
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள சீக்கியர்களின் வழிபாட்டுத் தலமான குருத்வாரா தஷ்மேஷ் தர்பாரில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி ஏற்பாட்டில் நடைபெற்ற வழிபாட்டில், சீக்கிய குருக்கள் கலந்துகொண்டு பிரதமர் மோடியின் நீண்ட ஆயுளுக்காக பிரார்த்தனைச் செய்தனர்.
குஜராத் மாநிலம் சூரத்தில் சேவா பக்வாடா பிரசாரத்தின் கீழ் மத்திய அமைச்சர் சி.ஆர்ப் படேல் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டார். அதைத்தொடர்ந்து தூய்மைப் பணிகளை மேற்கொண்டார்.