இந்தியா வந்துள்ள மொரிஷியஸ் பிரதமர் நவீன்சந்திர ராம்கூலம், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, குடியரசுத் துணைத் தலைவர் சிபி ராகிருஷ்ணன் ஆகியோரை சந்தித்து பேசினார்.
7 நாள் அரசுமுறைப் பயணமாக கடந்த 9ம் தேதி மொரிஷியஸ் பிரதமர் நவீன் சந்திர ராம்கூலம் இந்தியா வந்தார். அவர் இன்று டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் திரவுபதி முர்முவை சந்தித்துப் பேசினார்.
பின்னர் குடியரசு துணைத் தலைவர் சிபி ராதாகிருஷ்ணனையும் அவர் சந்தித்துப் பேசினார். இது தொடர்பாகக் குடியரசு தலைவர் மாளிகை வெளியிட்ட செய்தி குறிப்பில், இந்தச் சந்திப்பின் போது இருநாடுகளுக்கு இடையேயான வர்த்தகம், பொருளாதாரம், நல்லுறவு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி வந்துள்ள மொரிஷியஸ் பிரதமர் நவீன் சந்திர ராம்கூலமை காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரும் சந்தித்துப் பேசினர்.