நெல்லை ரயில் நிலையத்தில் பயணியை வடமாநில இளைஞர் அடித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நெல்லைச் சந்திப்பு ரயில் நிலையத்தில் தூத்துக்குடி சேர்ந்த பாண்டிதுரை, கோவையை சேர்ந்த தங்கப்பன், கேரளாவை சேர்ந்த பிரசாத் ஆகியோர் 4-வது நடைமேடையில் ரயிலுக்காகக் காத்திருந்தார்.
அப்போது அங்கு வந்த பீகாரைச் சேர்ந்த சூரஜ் என்ற இளைஞர் இரும்பு கம்பியால் மூவரையும் சரமாரியாகத் தாக்கி உள்ளார். 3 பேருக்கும் தலையில் பலத்தகாயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டிய நிலையில் வலி தாங்கமுடியாமல் கூச்சலிட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் படுகாயமடைந்த 3 பேரையும் நெல்லை அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதில் தங்கப்பன் சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த ரயில்வே போலீசார், தச்சநல்லூர் ரயில்வே மேம்பாலத்தின் கீழ்பகுதியில் கம்பியுடன் நின்றிருந்த சூரஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.