சைவ, வைணவ சமயங்கள் குறித்து முன்னாள் அமைச்சர் பொன்முடி வெறுக்கத்தக்க வகையில் பேசியது தொடர்பான புகார்களைக் காவல்துறை முடித்து வைத்ததை எதிர்த்து வழக்கு தொடரப் புகார்தாரர்களுக்கு உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
சைவ, வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து முன்னாள் அமைச்சர் பொன்முடி வெறுக்கத்தக்க வகையில் பேசிய விவகாரம் தமிழகத்தில் கடும் எதிர்ப்பலைகளை ஏற்படுத்தியது.
இந்த வழக்கைச் சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த நிலையில், ஆதாரங்கள் இல்லாததால் புகார்கள் முடித்து வைக்கப்பட்டதாகப் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், புகார்தாரர்களிடம் கேட்காமலேயே புகார்கள் முடித்து வைக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, பொறுப்பான பதவியில் இருந்த பொன்முடி, சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து அவதூறாகப் பேசியதை தவிர்த்து இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
மேலும், காவல்துறையினரும் குறைந்தபட்சம் புகார் அளித்தவர்களிடமாவது விசாரணை நடத்தி இருக்க வேண்டும் எனத் தெரிவித்த நீதிபதி, பொன்முடி மீதான புகார்களை காவல்துறை முடித்து வைத்ததை எதிர்த்து புகார்தாரர்கள் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தை அணுக அனுமதி அளித்து உத்தரவிட்டார்.