இந்தியாவில் இதுவரை வரிவிதிப்பு மட்டுமே நடந்து கொண்டு இருந்ததாகவும், விதித்த வரியைக் குறைத்த வரலாறு பிரதமர் மோடியின் ஆட்சியில் நடைபெற்றுள்ளதாகவும், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளையொட்டி பாஜகச் சார்பில் சென்னைத் திருவான்மியூர் கடற்கரையை தூய்மை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டு கடற்கரைப் பகுதியில் தூய்மைப் பணியை மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரி விதிப்பு குறைப்பால் மக்களுக்குப் பயன் கிடைக்கும் என்றும், உற்பத்தி அதிகரிக்கும் எனவும் கூறினார். மேலும், எடப்பாடி பழனிசாமி ஆட்சியின்போது மத்திய அரசிடம் இருந்து தமிழகத்திற்கு 40 ஆயிரம் கோடி திட்டங்கள் பெறப்பட்டதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, சென்னைத் திருவான்மியூரில் உள்ள காக்கும் கரங்கள் முதியோர் இல்லத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியை நயினார் நாகேந்திரன் தொடங்கி வைத்தார். பின்னர், தூய்மைப் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அவர், அவர்களுடன் அமர்ந்து காலை உணவு அருந்தினார்.