ரெட்டியார்சத்திரத்தில் உள்ள கோபிநாத சுவாமி மலைக் கோயிலில் கடந்த ஒரு வாரமாகக் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.
இந்நிலையில் உற்சவர் மலையப்ப சுவாமி சுற்றுவட்டாரக் கிராமங்களில் வீதி உலா வந்து, கதிர் நரசிங்க பெருமாள் கோயில் முன்பு அருள் பாலித்தார்.
அப்போது விழாவின் முக்கிய நிகழ்வான வழுக்கு மரம் ஏறுதல், உறியடித்தல் போன்ற நிகழ்வுகள் நடைபெற்றன.
இதில் கலந்து கொண்ட பக்தர்கள் 3 மணி நேர போராட்டத்துக்குப் பின்னர் வழுக்கு மரத்தின் உச்சியை அடைந்து மாலை, பொன்முடிகளைக் கீழே இறக்கினர்.
அதே போல உறியடி திருவிழாவிலும் ஆண்கள் பங்கேற்று அசத்தினர். இதனைக் கண்டு ரசித்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் பின்னர் உற்சவர் மலையப்ப சாமியைத் தரிசனம் செய்தனர்.