அக்டோபர் முதல் வாரத்தில் சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார் நயினார் நாகேந்திரன் - அண்ணாமலை
Sep 17, 2026, 12:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அக்டோபர் முதல் வாரத்தில் சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார் நயினார் நாகேந்திரன் – அண்ணாமலை

Murugesan M by Murugesan M
Sep 17, 2025, 02:32 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அக்டோபர் மாதத்தில் இருந்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என அக்கட்சியின் தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அக்கரை பகுதியில் நடைபெற்ற பாஜகச் சிந்தனை அமர்வு கூட்டத்தில் அக்கட்சியின் தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலைக் கலந்து கொண்டு நிர்வாகிகள் இடையே உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், அக்டோபர் மாதத்தில் இருந்து தமிழகத்தின் அனைத்துச் சட்டமன்ற தொகுதிகளிலும் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என்றும், மாவட்டம்தோறும் காலை நேரத்தில் முக்கிய நிர்வாகிகள் மற்றும் சமுதாயத் தலைவர்களைச் சந்தித்து ஆலோசனை நடத்துவார் எனவும் கூறியுள்ளார்.

ஒவ்வொரு நாளும் 2 அல்லது 3 சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட இடங்களில் நயினார் நாகேந்திரன் பிரசாரம் மேற்கொள்வார் என்றும், நாள்தோறும் பிரச்சாரம் மேற்கொள்ளும் 3வது இடத்தில் பொதுக்கூட்டம் நடைபெறும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

150 சட்டமன்ற தொகுதிகளில் பிரச்சாரத்தை நிறைவு செய்துள்ள எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப்பயணத்தில் எதிர்பார்த்ததைவிட மக்கள் கூட்டம் அதிகரித்துக் காணப்பட்டதாகவும் கூறினார்.

சுற்றுப் பயணத்தின்போது இபிஎஸ் பேச்சு பாஜகவைப் பாராட்டும் வகையில் இருந்தது எனக்கூறிய அண்ணாமலை, 2017ல் அதிமுகவின் ஆட்சியைப் பாஜக காப்பாற்றியது என்று எடப்பாடி பழனிசாமி பேசியது முக்கியத்துவம் வாய்ந்தது எனக் குறிப்பிட்டார்.

மேலும், தமிழகம் முழுவதும் மேற்கு, டெல்டா, தென் தமிழகம் என அனைத்து இடங்களிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைவர்கள் இணைந்து கூட்டுப் பிரச்சாரத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாக அண்ணாமலைத் தெரிவித்துள்ளார்.

Tags: tn bjpNainar Nagendran to begin his tour across Tamil Nadu in the first week of October - Annamalai
Share
Tweet
SendShare
Previous Post

கோபிநாத சுவாமி கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாட்டம்!

Next Post

மோகன்லால் நடித்த விருஷபா படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Related News

அல்-கொய்தாவுடன் தொடர்பில் இருந்த இளைஞர் கைது; உ.பி காவல்துறை அதிரடி

மதுரை மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்; ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி மோசடி செய்ததாக புகார்; அன்பில் மகேஷ் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை

மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம்; போக்குவரத்துக்கு தடை

யூடியூப் தொகுப்பாளினி குறித்து அவதூறு; தாமோதரன் பிரகாஷ் கைது

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா பாதுகாப்பு ஏற்பாடுகள்; அமைச்சர் நிர்மல்குமார் நேரில் ஆய்வு

Load More

அண்மைச் செய்திகள்

அரசு மற்றும் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் இடையே மோதல்; காரணம் இது தான் …

(c)PragMatrix

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தலுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு

மெக்கா மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ட்ரோன் தாக்குதல்; சவுதி எச்சரிக்கை

பாரிஸில் நடைபெறும் TOP RESA-2026 சர்வதேச சுற்றுலா கண்காட்சி; அமைச்சர் ராஜேஷ்குமார் திறந்து வைத்தார்

பிரதமர் நரேந்திர மோடியின் 25 ஆண்டு கால பொது சேவை; பொதுமக்களுக்கு மத்திய இணையமைச்சர் எல்.முருகன் அழைப்பு

UPI-ல் ரூ.2,000 மேற்பட்ட தொகைக்கு 0.4% சேவைக் கட்டணம் நிர்ணயம்;NPCI அறிவிப்பு

பிரிக்ஸ் மாநாடு சக்சஸ் ; சாதித்த இந்தியா : 3 நாட்களில் 15 தலைவர்களுடன் மோடி பேச்சுவார்த்தை – சிறப்பு தொகுப்பு!

மதுராந்தகம் தொகுதியில் வேட்பு மனுத்தாக்கல் செய்தார் பரந்தாமன் – திமுக வெற்றி பெறுவது உறுதி என நம்பிக்கை!

ஆம்னி பேருந்துகளில் முன்பதிவு செய்யப்படும் டிக்கெட் தானாக ரத்தாகும் விவகாரம் – பேருந்துகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என அமைச்சர் எச்சரிக்கை!

தாராபுரம் இடைத்தேர்தல் – திமுக வேட்பாளர் வேட்பு மனுத்தாக்கல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies